தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

கரந்தை திரௌபதி அம்மன் ஆலயத்தில் காளி புறப்பாடு!

கரந்தையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் காளி புறப்பாடு நடைபெற்றது.

News image

கரந்தை திரௌபதி அம்மன் - video crop

Updated On :21 ஜூலை 2026, 3:18 pm IST

கரந்தையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் காளி புறப்பாடு நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக ஆடி வந்த காளியை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாபாரத கதை உபன்யாசம் மற்றும் தீமிதி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதேபோல் கடந்த ஜூன் 29 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா விழா தொடங்கியது. இதையடுத்து கிருஷ்ணன் வரலாறு, தருமர் பிறப்பு, அம்மன் பிறப்பு, சுபத்ரா கல்யாணம், பாஞ்சாலி சபதம் என மகாபாரத கதைகள் நடைபெற்றது. 

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளி புறப்பாடு நடைபெற்றது‌. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட காளி தஞ்சாவூர் மாநகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து வீதிகளில் ஆடி வந்த காளி அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.