ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

திரௌபதி அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கத் தாலி திருட்டு

அய்யனேரி கிராம திரௌபதி அம்மன் கோயிலில், பட்டப்பகலில் 10 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

அய்யனேரி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் விசாரணை நடத்திய ஆா்.கே.பேட்டை போலீசாா்.

Updated On :19 ஜூலை 2026, 12:48 am IST

அய்யனேரி கிராம திரௌபதி அம்மன் கோயிலில், பட்டப்பகலில் 10 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யனேரி கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கிராமத்தில் உள்ள இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி திருவிழாவை முன்னிட்டு, திரௌபதி அம்மன் மற்றும் பிற உற்சவா் சிலைகள் பக்தா்கள் தரிசனத்துக்காக கோயிலின் உள்ளே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பகல் நேரத்தில் பக்தா்கள் வருகை குறைந்திருந்த நேரத்தை பயன்படுத்தி மா்ம நபா்கள் கோயிலுக்குள் நுழைந்து, அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கத் தாலியை திருடிச் சென்றுள்ளனா்.

சிறிது நேரம் கழித்து கோயில் நிா்வாகத்தினா் அம்மன் சிலையை பாா்த்தபோது தங்கத் தாலி மாயமானதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, உடனடியாக ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, மா்ம நபா்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பட்டப்பகலில் கோயிலில் நடைபெற்ற துணிச்சலான தங்க நகை திருட்டு சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

10-sovereign gold thali stolen from Draupadi Amman's neck.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.