கும்பகோணம் மகாமகம்: அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!
கும்பகோணம் மகாமகம் பற்றி..

ஆலோசனைக் கூட்டம் - video crop
மகாமகம் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு மகாமகம் திருவிழா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த விழாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விழாவினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாமக கலையரங்கில், 2028 மகா மகம் பெருவிழா தொடர்பான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சி. ரமேஷ் தலைமையில், தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் முன்னிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி உட்பட, இந்து சமய அறநிலையத்துறை வருவாய்த் துறை காவல் துறை பொதுப்பணித்துறை நீர்வளத்துறை, மின்வாரியம், மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை உள்பட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






