மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

800 ஆண்டுகள் பழமை... வன்மீகநாதர் கோயிலில் கோலாகல குடமுழுக்கு விழா!

வன்மீகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் பற்றி...

Vanmeeganathar Temple

வன்மீகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா - video crop

Published On :

800 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உரந்தை வளநாடு கிராமத்தில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து இன்று 6 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு புனித நீர் நிரப்பிய கலசங்களைக் கோபுர கலசத்திற்குச் சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர்.

பின்னர், அங்கு சிறப்புப் பூஜைகள் செய்து ராஜகோபுரம்,மூலவர், உற்சவர்,கொடிமரம் என விமான கோபுர கலசத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.