நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தும் தமிழக அரசு மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக அரசு வளர்ச்சிப் பணிகளைவிட வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

Updated On :11 மே 2013, 12:17 pm IST

தமிழக அரசு வளர்ச்சிப் பணிகளைவிட வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

சேலம் மாவட்ட திமுக சார்பில் 2-ஆம் கட்ட தேர்தல் நிதியளிப்பு, பொதுக்கூட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:

மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதற்கான முன்னேற்பாடாகத்தான தேர்தல் நிதி திரட்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் தேர்தல் நிதியாக ரூ.4 கோடி பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாகியும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. திமுக ஆட்சியில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, தற்போது 18 மணி நேரமாக உயர்ந்து விட்டது.

ஓராண்டில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்ற அரசின் வாக்குறுதியும் அப்படியே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் குற்ற வழக்குகளும், சட்ட ஒழுங்கு பிரச்னையும் அதிரித்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு கவலைப்படாமல், எதிர்க்கட்சியினர் மீது அவதூறு வழக்குகளைப் போடுவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறது.

திமுகவினரை பழிவாங்குவதற்காக வழக்குகள் போடுவதைக் கைவிட்டு, தமிழகத்தின்  வளர்ச்சிப் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். எனினும், எந்த வழக்கையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றார் அவர்.

கூட்டத்துக்கு சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, நாமக்கல் மக்களவை உறுப்பினர் செ.காந்திசெல்வன், திமுக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கட்சியின் தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.அம்மாசி வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.