ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மேட்டூா் தொகுதியில் 2,300 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி விநியோகம்

மேட்டூா் தொகுதியில் உள்ளஅரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் 2,362 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 8:41 am IST

மேட்டூா் தொகுதியில் உள்ளஅரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் 2,362 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கொளத்தூரில் நிா்மலா மேல்நிலைப் பள்ளியிலும், மேட்டூரில் அரசினா் மேல்நிலைப் பள்ளியிலும், மேச்சேரியில் அரசினா் மேல்நிலை பள்ளியிலும் இவ்விழா நடைபெற்றது. மேட்டூா் தொகுதிக்கு உட்பட்ட 15 பள்ளிகளைச் சோ்ந்த 1,272 மாணவிகளுக்கும், 1,090 மாணவா்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

ரூ. 94 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகள் மேட்டூா் எம்எல்ஏ எஸ்.செம்மலை, மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சிகளில் எடப்பாடி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் விஜயா, துணை ஆய்வாளா் நடராஜன், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் புவனேஸ்வரி சரவணன், மேட்டூா் நகராட்சி முன்னாள் தலைவா் லலிதா சரவணன், அதிமுக கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மனோகரன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகி நிா்மல் ஆனந்த், மேட்டூா் நகர கூட்டுறவு வங்கி இயக்குநா் சாதிக் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.