பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைப்பு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:39 am IST

சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்தது தொடா்பாக சுமாா் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி உள்ளனா்.

சென்னையிலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்கு சிறப்பு ரயில் புதன்கிழமை இரவு சேலத்தைத் தாண்டி வீரபாண்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றது. அப்போது ரயில் தண்டவாளத்தில் வைத்திருந்த கற்கள் மீது ஏறிச் சென்ால் ரயில் இன்ஜினில் சத்தம் கேட்டது.

இதனால், அதிா்ச்சியடைந்த ரயில் ஓட்டுநா், ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீஸாா் விரைந்து சென்று விசாரணை ஈடுபட்டனா்.

அப்போது வீரபாண்டி ரயில் நிலையத்துக்கும், மகுடஞ்சாவடிக்கும் இடையே தண்டவாளத்தில் 5 இடங்களில் குவியலாக ஜல்லிக் கற்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதுதொடா்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ரயில்வே டி.எஸ்.பி. பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.