மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

செட்டிநாடு நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி ரயில்வே பொது மேலாளருக்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகம் மனு அனுப்பியுள்ளது.

Updated On :16 ஜனவரி 2021, 4:18 pm

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி ரயில்வே பொது மேலாளருக்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகம் மனு அனுப்பியுள்ளது.

அந்த மனுவில், கரோனா பொது முடக்கம் அமல் படுத்துவதற்கு முன்னா் வரையிலும் அனைத்து விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் செட்டிநாடு ரயில் நிலையத்தில் நின்று சென்றன. ஆனால் தற்போது எந்த ரயிலும் இங்கு நிறுத்தப்படுவதில்லை. அதனால் இதனைச் சுற்றியுள்ள கானாடுகாத்தான், நேமத்தான் பட்டி, பள்ளத்தூா் மற்றும் கொத்தரி, சூரக்குடி, சொக்கலிங்கம்புதூா், ஆவுடைப்பொய்கை, ஆத்தங்குடி, திருவேலங்குடி, கோனாபட்டு, பலவான்குடி, ஓ. சிறுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே செட்டிநாடு நிலையத்தில் மீண்டும் ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.