இந்திய வீட்டுமனைக் கண்காட்சி, குவைத் நாட்டில் சால்மியா நகரில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனமும், எல்ஐசி வீட்டுக்கடன் வசதி நிறுவனமும் இணைந்து, மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இக் கண்காட்சியில், இந்தியாவில் வில்லாக்கள், வீடுகள், வீட்டு மனைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள 25 பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
இந்தியாவில், பெங்களூரு, சென்னை, கொச்சி, ஹைதராபாத் போன்ற நகரங்களில், இந்நிறுவனங்கள் செயல்படுத்தி வரும் வீடு மற்றும் வீட்டுமனைத் திட்டங்கள் குறித்த அரங்குகள் இடம்பெறும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமான கண்காட்சியாக இதைக் கருதலாம். அவர்களின் வாங்கும் சக்தியை மனத்தில் கொண்டே இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்களிடம் இருந்து வீடோ, வீட்டு மனையோ வாங்கும்பட்சத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்குக் கிடைக்கும் வங்கி லோன், வட்டி விகிதம், லோனுக்கான வரி உள்ளிட்ட பல்வகையான சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில், என்ஆர்ஐ ஆலோசனையும் பிரத்யேகமாக இக் கண்காட்சியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட் துறையில் தற்போது நிலவும் மந்த நிலையையும், வீட்டுமனை மற்றும் வீடுகளின் சந்தை விலை ஏற்ற இறக்க மாறுபாடுகளையும், பெண்களுக்கான சிறப்பு வட்டிச் சலுகைகளையும் கருத்தில்கொண்டு இந்த மாபெரும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஐபிஎல் சூதாட்டம்: தில்லியில் நால்வா் கைது

கம்பெனி சட்ட தீா்ப்பாய பொறுப்பு தலைவா் நியமன விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை
ஐஎஸ்ஐ ஆதரவு உளவுப் பிரிவு அம்பலமானது: 11 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


