கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன் - விலாஸ் சாரங்; தமிழில்:  காளிப்ரஸாத்; பக்.208; ரூ.260; நற்றிணை பதிப்பகம்,  சென்னை-5; 044- 2848 2818.

News image
Updated On :8 செப்டம்பர் 2019, 7:35 pm

விலாஸ் சாரங்

தம்மம் தந்தவன் - விலாஸ் சாரங்; தமிழில்:  காளிப்ரஸாத்; பக்.208; ரூ.260; நற்றிணை பதிப்பகம்,  சென்னை-5; 044- 2848 2818.

புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர்.  எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது.  அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம்.  ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி?  அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது.

புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் மீறி வெளியுலகைக் கண்டு  தனது புரிதலுக்கேற்றபடி உலகை விளங்கிக் கொண்டது, புத்தர் துறவியாகிவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு அவர் தந்தை  திருமணம் செய்து வைத்தது,  ஒரு குழந்தை பிறந்ததும் இல்வாழ்வைத் துறந்துவிடுவேன் என்று திருமணம் ஆன புதிதில் புத்தர் தனது மனைவியிடம் கூறியது,  ஆண் குழந்தை பிறந்தவுடன்  இல்லறத்தை விட்டு விலகியது,  எட்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும்  கபிலவஸ்துவிற்கு வந்து பிச்சைப் பாத்திரத்துடன் நடந்து வந்தது, அரசனான புத்தரின் தந்தை கோபித்துக் கொண்டது, மனைவி  யசோதரா புத்தரைக் கட்டித் தழுவியும் அவர் தன்னிலை மாறாதது என உணர்ச்சி பொங்க புத்தரின்  வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிக்கும் இந்நாவல், புத்தரின் வாழ்வியல் சிந்தனைகளை வாசகர்களின் மனதில் விதைத்துவிடுகிறது. 

உயர்ந்த சிந்தனைகளை  கவித்துவமான நடையில் பேசும் இந்த நாவல், ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றாதவிதத்தில்  மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.