முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்!சென்னையில் தரவு மையம் திறப்பு! முதல்வர் விஜய், சிங்கப்பூர் துணை பிரதமர் பங்கேற்பு!தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!

தண்டவாளம்

Published On :

தண்டவாளம் - ச.சுரேஷ்;  பக். 190, ரூ.200; சந்தியா பதிப்பகம்,  சென்னை - 83; 044- 24896979. 

கணினி அறிவியல் தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் குடிபுகுந்த தமிழரான ச.சுரேஷ் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் பல 
கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும், 40 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில்  எழுதியிருக்கும் சிறுகதைகள் இவை.  எழுத்து நடையும், மொழி ஆளுமையும் சிறுகதைகளில் கையாளப்பட்டிருக்கின்றன.

நூல் முழுவதும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களும், அவர்களது உளவியல் போராட்டங்களும் பேசப்பட்டிருக்கின்றன. கதையின் மாந்தர்கள் நம்மைச் சுற்றியிருக்கும் சக உறவுகளைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதால் வாசகனிடம் அவை நெருக்கம் கொள்கின்றன.

பிச்சைக்காரி, சித்ரா பெளர்ணமி, தாரணி, மெளனமான கதறல், தண்டவாளம் உள்ளிட்ட சிறுகதைகள் வாசிப்புக்குப் பிறகு நினைவு அடுக்குகளில் நிறைந்து கொள்ளும் ரகம். சமூகத்தில் சமுத்துவம் இல்லாமல் போனதற்கும், பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கும் தன்னை சரியானவர்கள்  என நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தவறுகள்தான் காரணம் என்ற உண்மையை இக்கதைகள் உணர்த்துகின்றன.

பெண்ணியத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி வெளிவரும் படைப்புகளுக்கு நடுவே பெண்களின் உள்ளார்ந்த வலிகளை உணர்த்தும் பதிவாக வெளிவந்திருக்கிறது தண்டவாளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.