/

செளரவ் கங்குலி நலமாக உள்ளார்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நலமுடன் உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 3:22 pm IST


பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி நலமுடன் உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:

கங்குலி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அவருடைய குடும்பத்தினருடன் பேசினேன். கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைக்கிறது என்றார். 

கங்குலி விரைவில் நலம்பெற வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலியும் ட்வீட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.