/

சென்னை ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி

சென்னை, ஜன.3: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:44 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, ஜன.3: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

 மாலையில் பிரதான மைதானத்தில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச், தரவரிசையில் 99-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் கெய் நிஸிகோரியை எதிர்கொண்டார்.

 முதல் செட்டில் 5-வது கேமில் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற சிலிச், பின்னர் அபாரமாக ஆடி அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட்டின் 6-வது கேமில் நிஸிகோரி, சிலிச்சின் சர்வீûஸ எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அந்த வாய்ப்புகளை சிலிச், சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

 அவ்வப்போது சென்னை ரசிகர்கள் நடப்பு சாம்பியன் சிலிச்சுக்கு தங்களது ஆதரவை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

 இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் சிறப்பாக ஆடினர். அதனால் இருவரும் மாறி, மாறி முன்னிலை பெற்றனர். 11 மற்றும் 12-வது கேம் நீண்ட நேரம் இழுத்தது. 12-வது கேமின் முடிவில் இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர். இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட நிஸிகோரி அபாரமாக ஆடி 7-6 (6-0) என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார்.

 பின்னர் நடைபெற்ற 3-வது செட்டின் தொடக்கத்தில் இருந்தே நிஸிகோரி அபாரமாக ஆடினார். 6-வது செட்டில் நிஸிகோரி 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது, கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் சிலிச்.

 அதை வெளிப்படுத்தும் வகையில் தனது பேட்டை தரையில் வீசி எறிந்தார். இறுதியில் 8-வது கேமில் நிஸிகோரி தனது சிறப்பான சர்வீஸ் மூலம் 6-2 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார்.

 இதன் மூலம் அவர் 4-6, 7-6 (6-0), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

 நடப்பு சாம்பியனான மரின் சிலிச், முதல் சுற்றில் நிஸிகோரியை எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்த்திருந்த சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணானது.

 ஜெர்மனி, அமெரிக்க வீரர்கள் வெற்றி:÷மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 102-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜோர்ன் பாவ்லேயிடம் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் சைமன் பொலேல்லி தோல்வி கண்டார்.

 அமெரிக்காவின் ராபர்ட் கென்ட்ரிக் 7-6 (1), 6-1 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் டெனிஸ் கிரீமெல்மேயரைத் தோற்கடித்தார்.

 பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஆண்ட்ரூஸ் ஹெய்டரை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

 இரட்டையர் பிரிவு: இரட்டையர் பிரிவில் ஜெர்மனியின் பிலிப் மார்க்ஸ்-பிரிட்டனின் கென் கப்ஸ்கி ஜோடி 6-3, 6-1 என்ற கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ்- பிரிட்டனின் ஜேர்மி முர்ரே ஜோடியை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இன்றைய ஆட்டங்கள்

 ஒற்றையர் பிரிவு:

 1. யூகி பாம்ப்ரி (இந்தியா) ஸ்ள்

 அலெக்சாண்டர் குட்ரியாவ்ட்ஸ் (ரஷியா)

 2. தாமஸ் பெட்ரிச் (செக்.குடியரசு) ஸ்ள்

 பிரடெரிகோ கில் (போர்ச்சுகல்)

 3. ஸ்டானிஸ்லா வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து) ஸ்ள்

 போபண்ணா (இந்தியா)

 4. டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஸ்ள் சோம்தேவ் (இந்தியா)

 5. எட்வர்டு ரோஜர் (பிரான்ஸ்) ஸ்ள் ரிச்சர்டு காஸ்கட் (பிரான்ஸ்)

 6. பிராங்க் டேன்சேவிக் (கனடா) ஸ்ள் ராபின் ஹேசி (நெதர்லாந்து)

 7. பிளாஸ் காவிக் (ஸ்லோவேகியா) ஸ்ள் ஜெர்மி சார்டி (பிரான்ஸ்)

 8. ஷேவியர் மலிஸ் (பெல்ஜியம்) ஸ்ள் மார்சன் இலன் (துருக்கி)

 9. அலிஜான்ட்ரோ ஃபல்லா (கொலம்பியா) ஸ்ள்

 ரூய் மஜாடோ (போர்ச்சுகல்)

 10. டஸ்டின் பிரௌன் (ஜெர்மனி) ஸ்ள் யூச்சு சுஜிடா (ஜப்பான்)

 இரட்டையர் பிரிவு:

 11. திவிஜ் சரண்- விஷ்ணு வர்தன் (இந்தியா) ஸ்ள்

 சைமன் பொலேலி (இத்தாலி)- ஜான்கோ டிப்சரேவிச் (செர்பியா)

 12. மரின் சிலிச், இவான் டோடிக் (குரேஷியா) ஸ்ள்

 லியோஸ் பிரைடல் (செக்.குடியரசு)- ஜோர்டான் கெர்

 (ஆஸ்திரேலியா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.