ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆசிய கோப்பை டி20: இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்

மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

News image
Updated On :30 அக்டோபர் 2012, 10:16 pm

dinamani

மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதவிருந்தன. ஆனால் இந்த ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. இதனால், லீக் சுற்றுகளில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்த இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.