ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

கால்பந்து போட்டியில் ஃபிக்ஸிங்: நடுவருக்கு 6 மாதம் சிறை

கால்பந்துப் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்த நடுவர் அலி சபாக்குக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2013, 12:12 am IST

கால்பந்துப் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்த நடுவர் அலி சபாக்குக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அலி சபாக் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் ஏஎஃப்சி கோப்பை கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால்-தம்பின் ரோவர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடுவர் அலி சபாக், லைன் மேன்கள் அலி ஈத், அப்துல்லா தலீப் ஆகியோர் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உடன்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போட்டிக்கு முன்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். வேறு நடுவர், லைன் மேனை வைத்து போட்டி நடத்தப்பட்டது.

விசாரணையில் அந்த மூவரும், சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு இருப்பதையும், மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உடன்பட்டதையும் ஒப்புக் கொண்டனர். இந்த வழக்கில் நடுவர் அலி சபாக்குக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

லைன்மேன்கள் இருவருக்கும் ஏற்கெனவே 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.