தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 2-0 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்து முதன்முதலாக பட்டத்தை கைப்பற்றியது.
இதன்மூலம், 2011-ம் ஆண்டு இறுதிச்சுற்றில் இந்திய அணியிடம் ஆப்கன் அணி தோல்வியடைந்திருந்தது.
தற்போது அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. மேலும், இம்முறை பட்டத்தை வென்று "ஹாட்ரிக்' சாம்பியன் ஆகலாம் என்ற இந்திய அணியின் கனவை ஆப்கன் வீரர்களான அசாத்ஸாய் மற்றும் அகமதி ஆகியோர் தகர்த்தனர்.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் புதன்கிழமை இப்போட்டி நடைபெற்றது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆப்கன் அணி, 8-வது நிமிடத்தில் முதல் கோலடித்து முன்னணி பெற்றது. அந்த அணியின் முஸ்தஃபா அசாத்ஸாய் இந்த கோலை அடித்தார். இதைத் தொடர்ந்து இடைவேளை வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இடைவேளைக்குப் பிறகும் ஆப்கன் வீரர்களின் வேகமான ஆட்டத்தை இந்திய வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், ஆப்கன் அணி 68-வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்து வலுவான நிலையை எட்டியது.
பின்னர், கடுமையாக முயற்சி செய்தபோதும் இந்திய வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. அரையிறுதியைப் போல, இந்த ஆட்டத்திலும் ஆப்கன் வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் ஆப்கன் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தெற்காசிய கால்பந்து சாம்பியனானது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்வம்:
ஆப்கானிஸ்தான் அணி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தெற்காசிய இறுதிச்சுற்றில் விளையாடுவதால் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு படையெடுத்தனர்.
"இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றால், அணி வீரர்களுக்கு தலா சுமார் ரூ. 15 லட்சம் அளிக்கப்படும்' என்ற அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகன் படம் யார் மூலமாக கசிந்திருக்கும்? திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டி!

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஜனநாயகன் வெளியான பிறகு ஒரு ரசிகனாக திரையரங்கில் பார்ப்பேன்! - அண்ணாமலை பேச்சு!

விஜய்யின் கும்மிடிப்பூண்டி பிரசாரமும் ரத்து! குமரியில்..?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


