சூப்பர் கிங்ஸ் வெற்றியைப் பறித்தார் போலார்ட்!
சென்னை சூப்பர் கிங்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி


சென்னை சூப்பர் கிங்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது. கடைசி ஓவரில் தோனி தூக்கியடித்த பந்தை எல்லைக்கோட்டில் அற்புதமாக கேட்ச் செய்த போலார்ட், சூப்பர் கிங்ஸின் வெற்றியைப் பறித்தார்.
முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியில் உத்தரப் பிரதேச வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்புத் இடம்பெற்றார். மும்பை அணியில் ஜேக்கப் ஓரமுக்கு பதிலாக வேயன் ஸ்மித்தும், ஜஸ்பிரித் பூம்ராவுக்கு பதிலாக பிரக்யான் ஓஜாவும் சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பாண்டிங்கும், சச்சினும் மும்பையின் இன்னிங்ûஸத் தொடங்கினர். டிர்க் நேன்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே சச்சின் விக்கெட்டை இழந்தது மும்பை. சச்சின் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ ஆனார்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் களம்புகுந்தார். புதுமுக வீரர் ராஜ்புத் வீசிய 4-வது ஓவரில் பாண்டிங் ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன்பிறகு தினேஷுடன் இணைந்தார் ரோஹித் சர்மா. ரோஹித் 5 ரன்கள் எடுத்திருந்தபோது நேன்ஸ் பந்துவீச்சில் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டைவிட்டார் ராஜ்புத். எனினும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய ரோஹித் 8 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு அம்பட்டி ராயுடு களம்புகுந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது.
போலார்ட் அதிரடி: இதையடுத்து போலார்ட் களம்புகுந்தார். அவர் வந்த வேகத்தில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்து அதிரடியைத் தொடங்கினார். இதனிடையே அம்பட்டி ராயுடு 7 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த ஸ்மித் 3 ரன்களிலும் வெளியேற, ஹர்பஜன் களம்புகுந்தார். ஹர்பஜன் நிதானமாக விளையாட, மறுமுனையில் போலார்ட் வெளுத்து வாங்கினார். ஜடேஜா, அஸ்வின், பிராவோ ஆகியோரின் ஓவர்களை பந்தாடினார். இதனால் அவ்வப்போது பந்துகள் சிக்ஸருக்கு பறந்தன.
பிராவோ-போலார்ட் மோதல்: பிராவோ வீசிய 17-வது ஓவரின் 3-வது பந்தில் போலார்ட் அடித்து ஆட முற்பட்டார். அப்போது பந்தைப் பிடித்து போலார்ட்டை நோக்கி எறிய முயன்றதோடு, ஏதோ திட்டினார். இதனால் கோபமடைந்த போலார்ட் பேட்டை உயர்த்தி காண்பித்ததோடு, அந்த ஓவரின் 5 -வது பந்தில் சிக்ஸர் அடித்து பிராவோவுக்கு பதிலடி கொடுத்தார். இவர்கள் இருவருமே மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் ஆவர். சர்வதேச போட்டியில் ஒன்றாக இணைந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வேகம் காட்டிய போலார்ட், 35 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். பிராவோ வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட போலார்ட் இரு சிக்ஸர்களை விளாச மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.
போலார்ட் 38 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57 ரன்கள், ஹர்பஜன் சிங் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். போலார்ட்-ஹர்பஜன் சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் சேர்த்தது.
பின்னர் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் 5 ரன்களில் முனாஃப் படேல் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதையடுத்து மைக் ஹசியுடன் இணைந்தார் சுரேஷ் ரெய்னா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 7 பந்துகளைச் சந்தித்த ரெய்னா ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் பந்துவீச்சில் பாண்டிங்கிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு வேயன் பிராவோ களம்புகுந்தார். முதல் 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்தது சூப்பர் கிóங்ஸ்.
நிதானமாக ஆடிய மைக் ஹசி, ஹர்பஜன் வீசிய 8-வது ஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு பிராவோ 10, பத்ரிநாத் 16 ரன்களில் ஆட்டமிழக்க, தோனியும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது சூப்பர் கிங்ஸ் 12.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இதன்பிறகு சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 69 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஹர்பஜன் சிங் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க, 4-வது பந்தில் தோனி பவுண்டரி அடித்தார். இதனால் அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. படேல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஜடேஜா, அடுத்த பந்தையும் அடித்து ஆட முற்பட்டபோது போல்டு ஆனார். அவர் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அஸ்வின் களம்புகுந்தார்.
ஹர்பஜன் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க, சூப்பர் சிங்ஸ் 100 ரன்களைக் கடந்தது. அதே ஓவரில் அஸ்வின் அவுட்டாக, சூப்பர் கிங்ஸýக்கு சிக்கல் ஏற்பட்டது. 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
பரபரப்பு: போலார்ட் வீசிய 18-வது ஓவரின் முதல் 4 பந்துகளில் தோனி ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விரட்ட, 5-வது பந்தில் பென் லாஃப்லின் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராஜ்புத் களம்புகுந்தார். போலார்ட் ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தன. இதனால் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜான்சன் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி, 24 பந்துகளில் அரைசதம் கண்டார். கடைசி ஓவரில் சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.
முனாப் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை தோனி சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் எல்லையில் நின்ற போலார்ட் அற்புதமாகக் கேட்ச் செய்தார். பின்னர், அடுத்த 5 பந்துகளைச் சந்தித்த ராஜ்புத் 2 ரன்களை மட்டும் எடுத்தார். இதனால் சூப்பர் கிங்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
ஆட்டநாயகன்: போலார்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இந்த ஆட்டத்தில் அதிக சிக்ஸர் அடித்ததற்கான விருதையும் போலார்ட் பெற்றார். புதிய சிந்தனைக்கான விருது பாண்டிங்குக்கு அளிக்கப்பட்டது.
ஸ்கோர் போர்டு
மும்பை இண்டியன்ஸ்
ரிக்கி பாண்டிங் - (சி) அஸ்வின் (பி) ராஜ்புத் - 6 - 10
சச்சின் டெண்டுல்கர் - 0 - 10
தினேஷ் கார்த்திக் - 37 - 25
ரோஹித் சர்மா - (சி) தோனி (பி) பிராவோ - 8 - 10
அம்பட்டி ராயுடு - (சி) நேன்ஸ் (பி) லாஃப்லின் - 7 - 10
கைரான் போலார்ட் - நாட் அவுட் - 57 - 38
வேயன் ஸ்மித் - (சி) பிராவோ (பி) அஸ்வின் - 3 - 5
ஹர்பஜன் சிங் - நாட் அவுட் - 21 - 21
உதிரிகள் - 9
மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 148
விக்கெட் வீழ்ச்சி: 1-3 (சச்சின்), 2-17 (பாண்டிங்), 3-41 (சர்மா), 4-59 (கார்த்திக்), 5-75 (ராயுடு), 6-83 (ஸ்மித்).
பந்து வீச்சு: நேன்ஸ் 4-0-18-1, ராஜ்புத் 3-0-25-1, பிராவே 4-0-44-2,
லாஃப்லின் 3-0-25-1, ஜடேஜா 2-0-12-0, அஸ்வின் 4-0-21-1.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ரப
மைக் ஹசி(பி) ஹர்பஜன் சிங்2023
முரளி விஜய்(பி) படேல்58
சுரேஷ் ரெய்னா(சி) பாண்டிங் (பி) ஜான்ஸன்107
பிராவோ(சி) கார்த்திக் (பி) ஓஜா1017
பத்ரிநாத்எல்பிடபிள்யூ (பி) ஓஜா1616
மகேந்திர சிங் தோனி(சி) போலார்ட் (பி) படேல்5126
ரவீந்திர ஜடேஜா(பி) படேல்1611
அஸ்வின்(சி) போலார்ட் (பி) ஹர்பஜன் சிங்25
லாஃப்லின்(பி) போலார்ட்01
ராஜ்புத்நாட் அவுட்26
நேன்ஸ்நாட் அவுட்00
உதிரிகள்7
மொத்தம் (20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு)139
விக்கெட் வீழ்ச்சி: 1-10 (விஜய்), 2-30 (ரெய்னா), 3-42 (ஹசி), 4-58 (பிராவோ), 5-66 (பத்ரிநாத்), 6-97 (ஜடேஜா), 7-108 (அஸ்வின்), 8-126 (லாஃப்லின்), 9 -137 (தோனி).
இன்றைய ஆட்டங்கள்
புணே வாரியர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்
இடம்: புணே | நேரம்: மாலை 4 மணி
சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இடம்: ஹைதராபாத் | நேரம்: இரவு 8 மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...