பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மருத்துவரை மணந்தார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பரான ஸ்ரீஜேஷுக்கும், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையும், ஆயுர்வேத மருத்துவருமான அலிஷாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:09 am IST

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பரான ஸ்ரீஜேஷுக்கும், முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனையும், ஆயுர்வேத மருத்துவருமான அலிஷாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த கீழகம்பளம் அருகேயுள்ள மகா விஷ்ணு கோயிலில் இவர்கள் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து வரும் ஸ்ரீஜேஷ், உலக லீக் 3 சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு பெங்களூரில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் பெங்களூர் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.