கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டியின் 3-வது சுற்றில் இந்திய அணி 5 தங்கம் உள்பட மொத்தம் 12 பதக்கங்களை வென்றது.
இந்திய வீராங்கனை பூவம்மா 400 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார். முன்னதாக இப் போட்டியில் முதல் மற்றும் 2-வது சுற்றுகளிலும் பூவம்மா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆரோக்கிய ராஜீவ், ஆடவர் 400 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார். இது அவர் வென்ற 2-வது தங்கம் ஆகும். முன்னதாக 2-வது சுற்றில் தங்கமும், முதல் சுற்றில் வெள்ளியும் வென்றார். இவர்கள் தவிர, அரவிந்தர் சிங் (ஆடவர் மும்முறைத் தாண்டுதல்), சித்தானந்த் திங்கலாயா (ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டம்), நிதேந்திரா சிங் (ஆடவர் 5,000 மீ. ஓட்டம்) ஆகியோரும் தங்கம் வென்றனர்.
ஜிதின் தாமஸ் (ஆடவர் உயரம் தாண்டுதல்), கேதா ராம் (ஆடவர் 5,000 மீ. ஓட்டம்), கிருஷ்ணா பூனியா (வட்டு எறிதல்) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இவர்களில் ஜிதின் தாமஸ் முந்தைய இரு சுற்றுகளிலும் தங்கம் வென்றிருந்தார்.
இந்தியாவின் நிகில் (ஆடவர் உயரம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஷ்வரி (ஆடவர் மும்முறைத் தாண்டுதல்), சஹானா குமாரி (மகளிர் உயரம் தாண்டுதல்), அனு மரியம் ஜோஸ் (மகளிர் 400 மீ. ஓட்டம்) ஆகியோர் வெண்கலம் வென்றனர். முன்னதாக தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற முதல் சுற்றில் 4 தங்கம் உள்பட 12 பதக்கங்களும், சோன்புரியில் நடைபெற்ற 2-வது சுற்றில் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


