/

சிங்க்ஃபீல்ட் செஸ்: ஆனந்த் - கருணா ஆட்டம் டிரா!

10 வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் 1 புள்ளியுடன் 9-வது இடத்தில் உள்ளார் ஆனந்த்.

Updated On :27 ஆகஸ்ட் 2015, 9:48 am

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் நான்காவது சுற்றில், ஆனந்தும் கருணாவும் மோதினார்கள். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

முதல் சுற்றில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவிடம் தோல்வி அடைந்த ஆனந்த், இரண்டாவது சுற்றில் ரஷியாவின் அலெக்ஸாண்டர் க்ரிஷுக்குடன் மோதி மீண்டும் தோல்வியடைந்தார். மூன்றாவது சுற்றில் டொபலோவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிரா ஆனது.

4-வது சுற்றில், ஃபெபியானோ கருணாவுடன் மோதினார் ஆனந்த். இந்த ஆட்டம், 42-வது நகர்த்தலில் டிரா ஆனது.

4-வது சுற்றின் முடிவில் டொபலோவ் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 10 வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் 1 புள்ளியுடன் 9-வது இடத்தில் உள்ளார் ஆனந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.