பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

ஜிரி வெஸ்லிக்கு பதிலடி கொடுத்தார் யுகி பாம்ப்ரி:இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தன்னை தோற்கடித்த செக் குடியரசின் ஜிரி வெஸ்லிக்கு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, ஏடிபி போட்டியில் பதிலடி கொடுத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Updated On :

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தன்னை தோற்கடித்த செக் குடியரசின் ஜிரி வெஸ்லிக்கு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, ஏடிபி போட்டியில் பதிலடி கொடுத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி தைவானில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடந்த ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் யுகி பாம்ப்ரி - ஜிரி வெஸ்லி மோதினர்.

ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியின் முடிவில், 7-6 (2), 6-0 என்ற செட் கணக்குகளில் யுகி பாம்ப்ரி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் கடந்த 20ஆம் தேதி தில்லியில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் "பிளே ஆஃப்' சுற்றின் 4-ஆவது ஆட்டத்தில் வெஸ்லியிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தார் பாம்ப்ரி.

யுகி தனது இறுதிச் சுற்றில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள தென் கொரியாவின் ஹியான் சுங்கை எதிர்கொள்கிறார். இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் அவருக்கு ரூ.83 லட்சம் பரிசாக கிடைக்கும். மேலும், தரவரிசையில் அவர் 100 இடங்களுக்குள் முன்னேற வழிவகுக்கும்.

சோம்தேவ் ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, உள்ளூர் ஜோடியான செங் பெங் சீ - சுங் ஹா யங்கிடம் 2-6, 3-6 என்ற செட் கணக்குகளில் தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.