பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், சானியா மிர்சா ஆகியோர் தனித்தனியே கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிஸ்டர்லாந்தின் மார்டினா ஹிங்ஸுடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த இணை கால் இறுதிப் போட்டியில் எலினா வெஸ்னினா மற்றும் புருணோ சோரேஸ் இணையை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றது.
பயஸ்-ஹிங்ஸ் இணை கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, இந்தியாவின் சானியா மிர்சா, குரோசியாவின் இவான் டோடிக்குடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த இணை யங் ஜன் சான் மற்றும் மேக்ஸ் மிர்னி இணையை 6-1, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.
சானியா மற்றும் பயஸ் இணைகள் தங்களது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகும். பயஸ் இதுவரை 9 கலப்பு இரட்டையர் பட்டங்களையும், சானியா 3 கலப்பு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

அதிரடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!
கரை இல்லாக் கல்வி...

எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


