இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு (ஞாயிற்றுக்கிழமை) வந்துள்ளனர். துபாய்க்கு வந்திறங்கிய ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஆறு நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு பயோ பபுலில் உள்ள மற்ற அணி வீரர்களுடன் இவர்கள் இணைவார்கள் என தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற தில்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள், இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இன்று துபாய்க்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளனர்.
ரிஷப் பந்த், ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பயோ பபுலில் உள்ள மற்ற அணி வீரர்களுடன் இணைவதற்கு முன்பு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆறு நாள்கள் தனிமைப்படுத்தலில் இருக்க போகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் முதல் கட்ட போட்டிகளில், எட்டு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் தில்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. முன்னதாக, இந்திய, இங்கிலாந்து அணிககளுக்கிடையேயான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

