திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முகமது ஷமி பூரண நலம்பெற பிரதமர் மோடி வாழ்த்து..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமியின் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

News image

அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வரும் முகமது ஷமி - படம் | முகமது ஷமி எக்ஸ் (டிவிட்டர்) தளப் பதிவு

Updated On :27 பிப்ரவரி 2024, 1:09 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமியின் கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அபாரமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மென்களை திணறத்த முகமது ஷமிக்கு தீராத கால் வலி இருந்து வந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக முகமது ஷமி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.

இதனையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். முகமது ஷமி கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஜனவரி கடைசி வாரத்தில் லண்டன் சென்றார். அங்கு கணுக்கால் காயத்துக்காக ஊசிப் போட்டுக்கொண்டார். பின்னர், மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Story image

படம் | முகமது ஷமி எக்ஸ் (டிவிட்டர்) தளப் பதிவு

இருப்பினும், ஊசிப் போட்டுக் கொண்டது பலனளிக்காததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து முகமது ஷமிக்கு நேற்று(பிப்.27) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், முகமது ஷமி பூரண நலம்பெற பிரதமர் மோடி தனது எக்ஸ்(டிவிட்டர்) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து முகமது ஷமி ஐபிஎல் தொடரில் விளையாடுவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும், பூரண குணமடைந்து மீண்டுவர சில காலம் ஆகும் எனவும், இயல்பு நிலைக்கு மீண்டும் வரமீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன் என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஷமி பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.