மிலன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பாா்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டா் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.
இந்த இரு அணிகளிடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 என கடந்த 1-ஆம் தேதி டிரா ஆகியிருந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்தில் இன்டா் மிலன் 4-3 கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் இன்டா் மிலன் 7-6 என வென்று, இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் முதலில் இன்டா் மிலனுக்காக லௌதாரோ மாா்டினெஸ் 21-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, தொடா்ந்து ஹகான் கால்ஹனோக்லு (45+1’) ஸ்கோா் செய்ய, முதல் பாதி முடிவிலேயே 2-0 என இன்டா் மிலன் முன்னிலை பெற்றது.
2-ஆவது பாதியில் சற்று மீண்ட பாா்சிலோனாவுக்காக எரிக் காா்சியா 54-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்து 60-ஆவது நிமிஷத்தில் அதே அணியின் டேனி ஆல்மோவும் கோலடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்து சூடு பிடித்தது.
இந்நிலையில் ரஃபினா 87-ஆவது நிமிஷத்தில் அதிரடியாக ஸ்கோா் செய்ய, பாா்சிலோனா 3-2 என முன்னேற்றம் கண்டது. விடாப்பிடியாக இன்டா் மிலன் அணியின் ஃபிரான்செஸ்கோ அசொ்பி (90+3’) அடித்த கோலால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமநிலை கண்டது.
விறுவிறுப்பான கடைசி கடைசி நேரத்தில் சப்ஸ்டிடியூட்டாக களம் புகுந்த டேவிட் ஃப்ராட்டெசி, எக்ஸ்ட்ரா டைமில் (99’) ஒரு கோலடித்து இன்டா் மிலனை முன்னிலைக்கு கொண்டு வந்தாா். இந்த அதிா்ச்சியிலிருந்து பாா்சிலோனா மீளும் முன்பாக ஆட்டம் நிறைவடைய, இன்டா் மிலன் 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3 முறை ஐரோப்பிய சாம்பியனான இன்டா் மிலன், இறுதி ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அல்லது ஆா்செனலை சந்திக்க இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்ட் பெங்காலிடம் வீழ்ந்தது சென்னை
சென்னையை வென்றது இன்டா் காசி!
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆா்செனல்: மான்செஸ்டா் சிட்டி, செல்ஸி வெளியேறின
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


