FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

வெற்றிக்குப் பின் கோல் கம்ப வலையை வெட்டி எடுத்துச் சென்ற ஸ்பெயின் வீரர்கள்! ஏன் தெரியுமா?

வெற்றிக்குப்பின் கோல் கம்பத்தின் வலையை வெட்டி எடுத்துச்சென்ற ஸ்பெயின் வீரர்களைப் பற்றி...

News image

வெற்றிக்குப் பின் கோல் கம்ப வலையை வெட்டிய ஸ்பெயின் வீரர்கள்.

Updated On :21 ஜூலை 2026, 4:52 pm IST

உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கோல் வலையை வெட்டிச் சென்ற ஸ்பெயின் வீரர்களின் செயல் உலகளவில் பேசுப்பொருளாகியிருக்கிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 19) அதிகாலை நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை வென்றதால், கால்பந்து திடலே அதிர்ந்தது.

போட்டியின் வெற்றிக்குப் பின் வீரர்களிடையே ஆர்ப்பரிப்பும், கொண்டாட்டமும் பார்க்க முடிந்தது. மேலும், தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்ட பின்னர், ஸ்பெயின் அணி வீரர்களிடம் வித்தியாசமான நடவடிக்கைகளைப் பார்க்க முடிந்தது.

போட்டிக்குப் பின்னர் கோலை கம்பத்துக்கு அருகில் சென்ற வீரர்கள், கோல் வலையைக் கத்தரித்து எடுத்துச் சென்றதைப் பார்க்க முடிந்தது. இது அங்கு குழுமியிருந்தவர்களுக்குக் குழப்பமாகத் தோன்றலாம். அந்த வலையை வெட்டி எடுத்துச் சென்றது ஏன்? என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் தொடங்கிய கூடைப்பந்து பாரம்பரியத்தின் நீண்ட கால மரபான, போட்டியின் முடிவில், கோல் கம்பத்தின் வலைகளை வெட்டி எடுப்பது என்பது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெற்றி பெற்ற அணிகள் வெற்றிகளை நினைவுகூரும் வகையில் வலைகளை வெட்டி, அதை நினைவாக வீட்டிற்கு எடுத்துச் செல்லத் தொடங்கின.

அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த கூடைப்பந்து பயிற்சியாளர் எவரெட் கேஸ், 1946-ஆம் ஆண்டில் இந்தியானாவில் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து அணிக்கு 23 ஆண்டுகளாகப் பயிற்சியளித்து வந்தார்.

மாநில அளவில் 4 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவரான இவர், 1947 ஆம் ஆண்டில், தனது அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சக வீரர்களின் தோள்கள் மீது ஏறி, கூடைப்பந்து போட்டிக்கான வலையின் ஒரு பகுதியை வெட்டி, அதனை நினைவாக எடுத்துச் சென்றிருக்கிறார். அதிலிருந்து இந்த நடைமுறை மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கூடைப்பந்து போட்டிகளில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும் இந்த மரபு, தற்போது என்சிஏஏ போட்டிகளிலும் தவறாமல் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Summary

The pieces of the net became personal keepsakes, marking one of the biggest achievements of their careers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.