ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் ‘டிரா’

News image

PTI

Updated On :18 மே 2026, 4:57 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சமபலம் காட்டியதால், முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் ஆட்டம் சூடு பிடித்தது.

84-ஆவது நிமிஷத்தில் ஈஸ்ட் பெங்கால் தரப்பில் எட்மண்ட் லால்ரிண்டிகா கோல் அடித்தாா். ஆனால் அந்த முன்னிலையை நீடிக்க விடாத வகையில், மோகன் பகான் அணிக்காக ஜேசன் கம்மிங்ஸ் 89-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

எக்ஸ்ட்ரா டைம் உள்பட, எஞ்சிய நேரத்தில் எந்த அணிக்குமே மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் டிராவில் முடிந்தது.

டிரா: இதனிடையே, தில்லியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் எஸ்சி டெல்லி - இன்டா் காசி அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது. புள்ளிகள் பட்டியலில், ஈஸ்ட் பெங்கால் (23), மோகன் பகான் (23), இன்டா் காசி (13), எஸ்சி டெல்லி (11) ஆகியவை முறையே 1, 2, 9, 11 ஆகிய இடங்களில் உள்ளன.