கிரேக்க - ரோமன் மல்யுத்தத்தில் வெள்ளி வென்று சாதனை படைத்தார் நிதேஷ் சிவாச்!
கிரேக்க - ரோமன் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று நிதேஷ் சிவாச் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதைப் பற்றி...
யூரி நாகசாடோ - நிதேஷ் சிவாச்.
கிரேக்க - ரோமன் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று நிதேஷ் சிவாச் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா மாகாணத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 97 கிலோ கிரேக்க - ரோமன் மல்யுத்தப் பிரிவில், ஜப்பானின் யூரி நாகசாடோ மற்றும் இந்தியாவின் நிதேஷ் சிவாச் இவரும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் மோதினர்.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பானின் யூரி நாகசாடோ 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். முதல் சுற்றின் கடைசி 30 வினாடிகளில் சிவாச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவரால் புள்ளிகளைப் பெற முடியவில்லை.
ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், கூடுதலாக இரண்டு புள்ளிகளைப் பெற்று நகாசடோ 4-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றார். இறுதியில் நகாசடோ தங்கப் பதக்கத்தையும், சிவாச் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
1962 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மாருதி மானே இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 64 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரேக்க - ரோமன் மல்யுத்த வீரர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது இரண்டாவது முறையாகும்.
Summary
India’s Nitesh Siwach secured the silver medal in the men’s 97kg Greco-Roman wrestling event at the Asian Games 2026 after being defeated by Japan’s Yuri Nakazato in the gold medal match on October 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




