குத்துச்சண்டையில் ஒரே நாளில் 3-ஆவது தங்கம்... இந்தியாவின் அங்குஷ் பங்கால் அசத்தல்!
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் ஒரே நாளில் 3-ஆவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...
அங்குஷ் பங்கால்.
ஆசிய விளையாட்டு ஆடவருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா மாகாணத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-ஆவது தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் நிறைவடைய இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கும் வேளையில் இந்தியாவின் விளையாட்டு நட்சத்திரங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஆடவருக்கான குத்துச்சண்டை 85 கிலோ பிரிவில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் தென்கொரியாவின் கிம் மின்சியோங்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அங்குஷ் பங்கால், 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் கிம்மை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இன்று (அக். 2) காலை மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் சீன நாட்டின் பாவ் ஜியி என்பவரை வீழ்த்தி லவ்லினாவும், அதனைத்தொடர்ந்து 65 கிலோ எடைப் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான சீன தைபேயின் நியென்-சின் சென்னை வீழ்த்தி பர்வீன் ஹூடாவும் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினர்.
குத்துச்சண்டையில் ஒரே நாளில் இந்தியர்கள் மூன்றாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர். நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியனான அவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு கிளாஸ்கோவில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில், மேரி கோம் தங்கம் வென்றிருந்தார். அதற்குப் பிறகு, 12 ஆண்டுகள் கழித்து குத்துச்சண்டையில் ஒரே நாளில் இந்தியர்கள் மூன்று பேர் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா, இன்று (அக்.2) ஒரே நாளில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், 15 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Summary
Indian boxer Ankush Panghal won the men's 80kg gold at the Asian Games in Aichi-Nagoya on Friday, beating South Korea's Kim Minseong 4-0 in the final. The reigning Commonwealth Games champion added the continental title to the gold he won in Glasgow two months ago.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






