
ஆசிய விளையாட்டு! 256 பதக்கங்களுடன் சீனா முதலிடம்! இந்தியா?
ஆசிய விளையாட்டுப் போட்டியின் புள்ளிப்பட்டியல் பற்றி...

இந்திய வீராங்கனைகள் - ANI
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 256 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் 4 நாள்களே மீதமிருக்கும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
செப். 30 காலை 10 மணி நிலவரப்படி, 143 தங்கம், 62 வெள்ளி, 51 வெண்கலம் உள்பட 256 பதங்கங்களுடன் சீனா முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜப்பான், 45 தங்கம், 71 வெள்ளி, 69 வெண்கலம் உள்பட 185 பதங்கங்களை வென்றுள்ளது. முதலிரண்டு இடங்களுக்கு இடையே நீண்ட இடைவெளி நீடிப்பதால் சீனாவின் ஆதிக்கம் இறுதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியா, உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, பஹ்ரைன், ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 8 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கலம் உள்பட 55 பதங்கங்களை வென்றுள்ளது.
Summary
Asian Games! China tops with 256 medals! India?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






