“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் பேசிய பிரதமர் மோடி! மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 760 உயர்வு!டீலக்ஸ், புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து தொடக்கி வைத்த முதல்வர்!ஆசிய விளையாட்டு! இந்திய வில்வித்தை அணிக்கு தங்கம்!ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் லவ்லினா!காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்

படகு பந்தயத்தில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் வெண்கலம் வென்று அசத்தல்!

ஆசிய விளையாட்டுப் படகு பந்தயத்தில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளதைப் பற்றி...

நேத்ரா குமணன்

Published On :

ஆசிய விளையாட்டுப் படகு பந்தயத்தில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய விளையாட்டுத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பெண்களுக்கான டிங்கி படகுப் பிரிவில் இந்தியாவுக்காக தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணன் கலந்துகொண்டார்.

தாய்லாந்தின் சோபியா மாண்ட்கோமெரிக் 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தையும், சிங்கப்பூரின் ஜானியா ஆங்க் 13 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், சென்னையில் பிறந்தவரான நேத்ரா, 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில் பங்கேற்ற நேத்ராவுக்கு இது முதல் பதக்கமாகும். இதற்கு முன்னதாக 2014, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற நேத்ரா, 2014-ல் ஏழாவது இடத்தையும், 2018-ல் ஐந்தாவது இடத்தையும் பிடித்தார். அதே சமயம், 2022-ல் நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார்.

இந்திய குழுவினர் 12 தங்கம், 25 வெள்ளி, 34 வெண்கலப்பதக்கத்துடன் மொத்தமாக 71 பதக்கங்களை வென்று 6-ஆவது இடத்தில் உள்ளனர். 157 தங்கம் உள்பட 297 பதக்கங்களை வென்று சீன குழுவினர் முதலிடத்தில் உள்ளனர்.

Summary

Nethra Kumanan added another milestone to her trailblazing career on Friday, October 2, winning the bronze medal in the women's dinghy event at the Asian Games 2026 in Aichi-Nagoya, Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.