நீரு தண்டா ‘ஹாட்ரிக்’.. துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!
துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளதைப் பற்றி...

நீரு தண்டா - கைனன் செனாய்.
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் அய்ச்சி - நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் 4 நாள்களே மீதமிருக்கும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்தியாவும் பதக்க வேட்டையைத் தொடர்ந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா - கைனன் செனாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பிரிவின் இறுதிப்போட்டியில் இருவரும் 40-க்கு 34 ஷாட்கள் எடுத்து ஆசிய அளவில் சாதனை படைத்து முதலிடம் பிடித்தனர். இதனால் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்தது.
கத்தார் அணி 40-க்கு 32 ஷாட்கள் எடுத்து வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
நீரு தண்டா ‘ஹாட்ரிக்’
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்த இரண்டு நாள்களில் நீரு தண்டா வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற இவர், ஆஷிமா அஹ்லாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோருடன் இணைந்து மகளிரணி பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தார். தற்போது கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.
இந்திய குழுவினர் அசத்தல்
துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கிரிக்கெட், தடகளம் என அசத்திய இந்திய குழுவினர் 9 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலப்பதக்கம் என்று மொத்தமாக 57 பதக்கங்களை வென்று 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும், இன்று (செப். 30) ஒரேநாளில் இந்திய குழுவினர் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Neeru Dhanda And Kynan Chenai Fire India To Trap Mixed Team Gold With New Asian Record At Asian Games 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



