/

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஷிகர் தவன் விலகல்: ஐஏஎன்எஸ் தகவல்!

ஆஸி.க்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டதால்...

News image
Updated On :19 ஜூன் 2019, 10:57 am

எழில்

ஆஸி.க்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டதால் காயமடைந்தார் ஷிகர் தவன். இதனால் 3 ஆட்டங்களில் அவரால் ஆட முடியாது என அறிவிக்கப்பட்டது. 

காயமடைந்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் குணமடைய 10 நாள்கள் ஆகலாம் என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இதனால், பதிலி வீரராக ரிஷப் பந்த் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஷிகர் தவன், உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. காயத்திலிருந்து விரைவில் மீளமுடியாத நிலை உள்ளதால் அவர் விலகியுள்ளதாகக் காரணம் கூறியுள்ளது. 

எனினும் இதுகுறித்து பிசிசிஐயிடமிருந்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.