உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு சிக்ஸரும் விட்டுக் கொடுக்காத பந்துவீச்சாளர்கள் யார் யார்?
பேட்ஸ்மேன்களுக்கு இணையாகப் பந்துவீச்சாளர்களும் திறமையை நிரூபித்து வருகிறார்கள்...


2019 உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பேட்ஸ்மேன்களுக்கு இணையாகப் பந்துவீச்சாளர்களும் திறமையை நிரூபித்து வருகிறார்கள். அணியின் வெற்றிகளுக்கு அதிகமாகப் பங்களிக்கிறார்கள்.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிகப் பந்துகள் வீசி சிக்ஸர் அடிக்க முடியாத பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர். அவருடைய அணி மோசமாக விளையாடினாலும் தாஹிரின் பங்களிப்புக்குக் குறையே சொல்லமுடியாது. இந்திய வீரர்களான பும்ரா, புவனேஸ்வர் பந்துகளில் இதுவரை எந்தவொரு பேட்ஸ்மேனும் சிக்ஸர் அடிக்கவில்லை.
100+ பந்துகளை வீசி சிக்ஸர் அடிக்க முடியாத பந்துவீச்சாளர்கள் - 2019 உலகக் கோப்பை
282 - இம்ரான் தாஹிர்
216 - முகமது அமிர்
172 - ஒஷானே தாமஸ்
169 - பும்ரா
144 - ஹமித் ஹாசன்
143 - பென் ஸ்டோக்ஸ்
136 - புவனேஸ்வர் குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...