நெருக்கடி கொடுத்த ஆப்கானிஸ்தான்: இந்திய அணி நிதானமான ஆட்டம்!
48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் கோலி. இந்த உலகக் கோப்பைப் போட்டியில்...


இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக, ஷமி இடம்பெற்றுள்ளார். விஜய் சங்கரும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா, அஃப்தாப் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
புள்ளிகள் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இந்திய அணி 4-ம் இடத்திலும் புள்ளிகள் எதுவுமின்றி ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியத் தொடக்க வீரர்கள் நிதானமாகவே விளையாடினார்கள். 4 ஓவர்கள் வரை 7 ரன்கள் தான் கிடைத்தன. 10 பந்துகளில் 1 ரன் மட்டும் எடுத்த ரோஹித் சர்மா, முஜீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கோலி வந்து ரன் எடுக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார். 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த ராகுல், முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்காம் நிலை வீரராகக் களமிறங்கிய விஜய் சங்கர், கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். 48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் கோலி. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவர் எடுக்கும் மூன்றாவது அரை சதம் இது.
எனினும் 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ரஹ்மத் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். அடுத்தச் சில ஓவர்களில் கோலியும் வெளியேறினார். 67 ரன்களில் நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 30.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என்கிற அபாயகரமான நிலையில் இருந்தது இந்திய அணி. பிறகு தோனியும் ஜாதவும் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.
இந்திய அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 22, ஜாதவ் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...