அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை?: சச்சின் டெண்டுல்கர் கணிப்பு!
என்னைப் பொறுத்தவரை தோனி 5-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டும். ரோஹித் சர்மா, தவன், கோலி...


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை தோனி 5-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டும். ரோஹித் சர்மா, தவன், கோலி, 4-ம் நிலை வீரர், தோனி என்றுதான் பேட்டிங் வரிசை இருக்கவேண்டும். பிறகு பாண்டியா களமிறங்கலாம்.
அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிச்சயமாக அரையிறுதிக்குள் நுழையும். நான்காவது அணியாக நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று இருக்கலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...