
இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
தி ஹண்ட்ரட் தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் ஆலி போப் இங்கிலாந்து அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஆலி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது சிறப்பானது. அடுத்த ஆண்டு ஆஷஸ் தொடர் வரவிருப்பதால், ஆலி போப் இங்கிலாந்து அணியை வழிநடத்துவது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு நன்மையளிக்கும் என நம்புகிறேன். இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனான ஆலி போப் தற்போது கேப்டனாக அணியை வழிநடத்தவுள்ளார். அவருக்கு நிறைய சவால்களும் காத்திருக்கின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.