2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா - படம் | பிசிசிஐ (எக்ஸ்)

Published On :

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 9-வது இடத்தில் உள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு 4-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். இலங்கை அணியின் வீராங்கனைகளான நிலாஷிகா டி சில்வா, கவிஷா தில்ஹாரி மற்றும் ஹர்ஷிதா சமரவிக்கிரம தவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். முதல் இரண்டு இடங்களில் ஷிவர் பிரண்ட் மற்றும் லாரா வோல்வர்ட் உள்ளனர்.

டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில், ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தில் நீடிக்கிறார். டி20 பேட்டிங் தரவரிசையில் இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம மற்றும் அயர்லாந்து அணியின் கேபி லிவீஸ் முன்னேற்றம் கண்டுள்ளனர். டி20 போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் பெத் மூனி, தஹிலா மெக்ராத் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.