வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பெறும் முதல் வெற்றி இதுவாகும். அதேபோல டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணியும் வங்கதேசமே. வங்கதேசத்துக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மாற்றங்கள் வரும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வேன். மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ளது.