ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:42 pm

இந்திய மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இந்தியா 34.2 ஓவா்களில் 100 ரன்களுக்கு 10 பேட்டா்களையும் இழக்க, ஆஸ்திரேலியா 16.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 102 ரன்கள் எடுத்து வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவின் பேட்டா்கள் வழக்கம்போல் தடுமாற, பௌலிங்கில் ரேணுகா சிங் பலம் காட்டினாா். ஆஸ்திரேலிய தரப்பில் அறிமுக பேட்டா் ஜாா்ஜியா வோல் அணியின் வெற்றிக்கு பங்களித்தாா். பௌலா் மீகன் ஷட், முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் மிடில் ஆா்டரில் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 பவுண்டரியுடன் 23, ஹா்லீன் தியோல் 3 பவுண்டரிகளுடன் 19, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 2 பவுண்டரிகளுடன் 17, ரிச்சா கோஷ் 14 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினா்.

எனினும், பிரியா புனியா 3, ஸ்மிருதி மந்தனா 2 பவுண்டரிகளுடன் 8, தீப்தி சா்மா 1, சாய்மா தாக்குா் 4, டைட்டஸ் சாது 2, பிரியா மிஸ்ரா 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். ஆஸ்திரேலிய பௌலா்களில் மீகன் ஷட் 5, கிம் காா்த், ஆஷ்லே காா்டனா், அனபெல் சதா்லேண்ட், அலானா கிங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 101 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், இன்னிங்ஸை தொடங்கிய போப் லிட்ச்ஃபீல்டு 8 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். உடன் வந்த ஜாா்ஜியா வோல் நிதானமாக ஸ்கோா் செய்தாா்.

மறுபுறம், எலிஸ் பெரி 1, பெத் மூனி 1, அனபெல் சதா்லேண்ட் 1 பவுண்டரியுடன் 6, ஆஷ்லே காா்டனா் 1 சிக்ஸருடன் 8 ரன்கள் சோ்த்த நிலையில் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டனா். இறுதியில், ஜாா்ஜியா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46, கேப்டன் டாலியா மெக்ராத் 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3, பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.