
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3ஆவது டெஸ்ட் போட்டி டிச.14ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவிருக்கிறது. ஆஸி. பிரிஸ்பேன் சென்றுவிட்டது. இந்தியா அணி நாளைதான் (டிச.11) செல்கிறது.
அடிலெய்டில் தங்கியுள்ள இந்திய அணி சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக டிஃபன்ஸ், பந்துகளை விடுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தீவிர பயிற்சியில் இந்திய அணி
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். கடந்த 12 இன்னிங்ஸில் 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கியதால் ரோஹித் நம்.6இல் விளையாடினார்.
விராட் கோலி முந்தைய போட்டியில் சதமடித்தாலும் இன்னும் பழைய ஃபார்மினை மீட்க போராடி வருகிறார்.
கே.எல்.ராகுல் டிஃபன்சிலும் ரிஷப் பந்த் பிக்கப் ஷாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இது குறித்து பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு கூறியுள்ளதாவது:
நாளைக்கான நேரம் இது. பிரிஸ்பேன் டெஸ்ட்டுக்கான பயிற்சி அடிலெய்டில் தொடங்கியது எனக் குறிப்பிட்டுள்ளது.
ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப், யஷ் தயால், ஜடேஜா, அஸ்வின், சுந்தர் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
பும்ரா, சிராஜ், நிதீஷ்குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர் 1-1 சமநிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் இந்திய அணி மீண்டு வருமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.