
கடந்தமுறை பார்டர் கவாஸ்கர் தொடரில் 1988க்குப் பிறகு முதல்முறையாக பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து மே.இ.தீவுகள் அணியிடமும் தோல்வியுற்றது.
வரும் சனிக்கிழமை (டிச.14) 3ஆவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. தற்போது, 1-1 என சமநிலையில் இருக்கிறது.
கடந்தமுறை உள்ளூர் பிங்க் பந்தில் முதல்நாளிலே 15 விக்கெட்டுகள் விழுந்தன. அதேபோல் அமைக்கவிருப்பதாக பிட்ச் மேற்பார்வையாளர் கூறியுள்ளார்.
இந்திய அணி பிரிஸ்பேன் சென்றடைந்தது. பிசிசிஐ விடியோ வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கமான காபா பிட்ச்
இந்த நிலையில் காபாவின் பிட்ச் மேற்பார்வையாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறியதாவது:
ஒரு ஆண்டின் பல்வேறு நிலைகளில் பிட்ச்கள் பல்வேறு விதமாக இருந்திருக்கின்றன. தொடக்கத்தில் பிட்ச்கள் பசுமையாக இருக்கும். பின்னர், அடுத்தடுத்த செஷன்களில் பிட்ச்கள் தேய்மானமாகும்.
காபா பிட்ச் எதற்கு பெயர்போனதோ அதேமாதிரியாக வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாகவும் பௌன்சர்களும் இருக்குமாறு தயாரிக்கவிருக்கிறோம்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் காபா பிட்ச்சினை எப்படி தயாரிப்போமோ அப்படித்தான் இந்தமுறையும் தயாரிக்க முயற்சிக்கிறோம்.
பேட்டர்கள், பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமாக பிட்ச் அமைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். ஆனால், எல்லாவற்றுக்கும் ஏற்றதுபோல் இருக்குமென நம்புகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.