ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி ஏற்கக்கூடாது: முன்னாள் பாக். வீரர்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி ஏற்கக்கூடாதென முன்னாள் பாக். வீரர் கருத்து.
ஐசிசி, சாம்பியன்ஷ் டிராபி கோப்பை, பிசிபி.
ஐசிசி, சாம்பியன்ஷ் டிராபி கோப்பை, பிசிபி. கோப்புப் படங்கள்.
Published on
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசியின் லாலிபாப் பேரத்தை பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) ஏற்கக்கூடாதென முன்னாள் பாக். வீரர் பாசித் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தவிருக்கிறது. அதில் இந்திய அணி அரசியல் காரணங்களால் பாகிஸ்தானில் விளையாடாதென பிசிசிஐ தெரிவித்தது.

இந்தியாவுக்கு மட்டும் வேறுநாடுகளில் போட்டி நடத்தும் ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பாகிஸ்தான் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

ஐசிசியின் லாலிபாப்

2027, 2028 மகளிர் டி20 உலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்குகிறேன் என்கிறார்கள். 2 ஐசிசி தொடர்கள் பாகிஸ்தானில் நடைபெறுவது சிறந்த விஷயம் என சிலர் கூறுவார்கள். ஆனால், இந்தப் போட்டிகளால் என்ன பயன்? 2026-இல் பாகிஸ்தான் இந்தியாவுக்கு செல்லும். அடுத்து இந்திய மகளிரணி பாகிஸ்தானுக்கு வரும். இதனால் ஒலிபரப்பாளர்கள் எந்தவிதமான இழப்பையும் சந்திக்க மாட்டார்களா?

லாலிபாப் என்றால் என்ன தெரியுமா? இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதுக்கு ஐசிசி தரும் லாலிபாப். ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புதல் அளித்தால் இரண்டு ஐசிசி தொடர்களை நடத்த அனுமதி தருகிறேன் எனக் கூறாதீர்கள். இதனால் பாகிஸ்தானுக்கு எந்தப் பலனும் இல்லை.

ஆசியக் கோப்பை நடத்த அனுமதி கேட்கலாம். மகளிர் உலகக் கோப்பையோ அல்லது யு-19 உலகக் கோப்பையை நடத்துவதால் பாகிஸ்தானுக்கு பயனில்லை. இந்த லாலிபாப்பை வாங்க பிசிபி சம்மதித்தால் அது தோல்வியில்தான் முடியும்.

பொருளாதர இழப்பு

இரு நாட்டவருமே இரண்டு நாடுகளில் விளையாடினால்தான் பொருளாதார இழப்பு ஏற்படாது என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் அதிகளவு வருமானம் கிடைக்கும். அதை பாகிஸ்தானில் நடத்தாவிட்டால் பாகிஸ்தான் ஏன் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதிக்க வேண்டுமெனவும் கேள்வி எழுப்பினார்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வெளிநாட்டில் நடத்துவதால் ஏற்படும் பொருளாதார இழப்புக்கு ஐசிசி நஷ்ட ஈடு வழங்காது என்பது இன்னமும் கூடுதல் சர்ச்சையாகும்படியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com