புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள் காயம்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

News image

இந்திய அணி வீரர்கள்

படம் | AP

Updated On :22 டிசம்பர் 2024, 11:04 am

DIN

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ரோஹித் சர்மா, ஆகாஷ் தீப் காயம்

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலைப்பயிற்சியின்போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பேட்டிங் பயிற்சியின்போது, ரோஹித் சர்மாவுக்கு முழங்காலில் அடிபட்டது. அதேபோல, பந்துவீச்சின்போது ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் இருவருக்குமான காயம் பயப்படும் படியான அளவுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவர்கள் விளையாடுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.

காயம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஆகாஷ் தீப் பேசியதாவது: கிரிக்கெட் விளையாடும்போது அடிபடுவது இயல்பு. நாங்கள் பயிற்சி மேற்கொண்ட ஆடுகளம் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கானது என நினைக்கிறேன். பந்துகள் மிகவும் கீழாக வந்தன. பயிற்சியின்போது, அடிபடுவது சகஜம். போட்டியில் விளையாட முடியாத அளவுக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.