சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்!

News image
- படம் | AP
Updated On :27 டிசம்பர் 2024, 4:09 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

90 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதன் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அய்டன் மார்க்ரம் 89 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் அதிகபட்சமாக 93 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும்.

பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஷத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அமர் ஜமால் 2 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் மற்றும் சைம் ஆயுப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸ் - 88/3

தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. சைம் ஆயுப் 27 ரன்கள் எடுத்தும், கேப்டன் ஷான் மசூத் 28 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த கம்ரான் குலாம் இரண்டாவது இன்னிங்ஸ்களில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பாபர் அசாம் 16 ரன்களுடனும், சௌத் ஷகீல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 2 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.