நிதீஷ் ரெட்டியின் சதம் நம்பமுடியாததாக இருந்ததாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பந்த் இருவரும் களத்தில் இருந்தனர்.
நம்பமுடியாத சதம்
ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இன்று (டிசம்பர் 28) மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். அவர்கள் சிறிது ரன்கள் குவித்தாலும் களத்தில் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரிஷப் பந்த் 28 ரன்கள் எடுத்தும், ஜடேஜா 17 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் பார்டனர்ஷிப் அமைத்த நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதீஷ் குமார் ரெட்டி டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில், நிதீஷ் குமார் ரெட்டி மனதளவில் மிகவும் வலிமையான மனிதர் எனவும், அவர் 120 சதவிகித உழைப்பை கொடுத்துள்ளார் எனவும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நம்பமுடியாத சதம். நிதீஷ் ரெட்டியின் இந்த சதம் மிகவும் நீண்ட நாள்களுக்கு நினைவில் இருக்கும். இந்த சதம் நீண்ட நாள்கள் பேசப்படும். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள இந்த சதம் மேலும் சிறப்பானது. இந்த சதத்தை நிதீஷ் குமார் ரெட்டி எப்போதும் நினைவில் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.
அவரை சில ஆண்டுகளாக தெரியும் என்பதால், நிதீஷ் குமார் ரெட்டி குறித்து ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக கூற முடியும். அவர் மனதளவில் மிகவும் வலிமையான நபர். அவர் இன்று மிக அற்புதமாக விளையாடினார் என்றார்.
நிதீஷ் ரெட்டியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் ரெட்டி 105 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இங்கிலாந்து ஓடிஐ தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!

த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது வாஷிங்டன் ஃப்ரீடம்!

எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே: வாஷிங்டன் சுந்தர்

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



