முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலிருந்து காயம் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.

News image
Updated On :23 ஜூன் 2026, 3:49 pm IST

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலிருந்து காயம் காரணமாக நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடர் நிறைவடைந்ததையடுத்து, இந்திய அணி டி20 தொடர்களில் விளையாடுவதற்காக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது.

இந்த நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.

காயம் காரணமாக விலகியுள்ள நிதீஷ் குமார் ரெட்டிக்குப் பதிலாக மாற்று வீரராக சூர்யான்ஷ் ஜெட்ஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது, நிதீஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயத்திலிருந்து குணமடைய குறைந்த 4 வாரங்களாவது ஆகும் என பிசிசிஐ மருத்துக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 வயதாகும் நிதீஷ் குமார் ரெட்டி இந்திய அணிக்காக 10 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Nitish Kumar Reddy has withdrawn from the series against Ireland and England due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.