முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சிக்ஸர் அடித்து முதல் டி20 சதத்தை பதிவு செய்தார் சாம் கரண்!

இங்கிலாந்தின் பிரபல ஆல்ரவுண்டர் சாம் கரண் தனது முதல் டி20 சதத்தினை நிறைவு செய்துள்ளார்

News image

சாம் கரண் - படம்: சர்ரே கிரிக்கெட் / எக்ஸ்

Updated On :19 ஜூலை 2024, 1:00 pm IST

இங்கிலாந்தின் பிரபல ஆல்ரவுண்டர் சாம் கரண் தனது முதல் டி20 சதத்தினை நிறைவு செய்துள்ளார்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சர்ரே, ஹேம்ஸ்ரி அணிகள் மோதின. டாஸ் வென்ற சர்ரே பௌலிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஹேம்ஸ்ரி அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபடசமாக டாபி ஆல்பர்ட் 66 (45), ஜேம்ஸ் வின்ஸ் 23(11), லியாம் டாவ்ஸன் 19 (9) அடித்தார்கள்.

அடுத்து ஆடிய சர்ரே அணியில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் சாம் கரண் இறங்கினார். 13 ஆவது ஓவரில் தனது அரைசத்ததினை நிறைவு செய்த சாம் கரண் 58 பந்துகளில் தனது முதல் சத்தினை (102)அடித்து அசத்தினார். இதில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் அடித்து சதத்தினை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

19.1 ஓவரில் 188/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது சர்ரே அணி.

சாம் கரண் இதுவர 191 இன்னிங்ஸில் விளையாடி 3323 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 133.29. 18 அரைசதம், 1 சதம் விளாசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட சாம் கரண் தொடக்க வீரராக களமிறங்கி சரியாக விளையாடவில்லை. சிஎஸ்கே அணியில் நம்,4,5,6இல் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரராக இருந்தார் சாம் கரண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.