குல் பெரோஸா
குல் பெரோஸா

பாகிஸ்தான் அபார வெற்றி

ஆசிய கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது ஆட்டத்தில் நேபாளத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.
Published on

ஆசிய கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது ஆட்டத்தில் நேபாளத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பாக். அணி பௌலிங்கை தோ்வு செய்ய

நேபாளம் பேட்டிங் செய்ய களமிறங்கியது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 108/6 ரன்களை சோ்த்தது நேபாளம். அந்த அணியில் சீதா ரானா 26, பூஜா மஹாதோ 25 அதிகபட்சமாக ரன்களைச் சோ்த்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுடன் அவுட்டாகி நடையைக் கட்டினா்.

பௌலிங்கில் பாக் தரப்பில் சாடியா இக்பால் 2-19 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பாக். அதிரடி வெற்றி 110/1:

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 11.5 ஓவா்களிலேயே 110/1 ரன்களை குவித்து வெற்றி இலக்கை அடைந்தது. குல் பெரோஸா 10 பவுண்டரியுடன் 57 ரன்களை விளாசி அவுட்டானாா். மறுமுனையில் முனிபா அலி 8 பவுண்டரியுடன் 46 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா்.

இறுதியில் நேபாளத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

இந்த வெற்றியால் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் யுஏஇ அணியை வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

X
Dinamani
www.dinamani.com