ஆஷஸ் தொடரில் விளையாட கடுமையாக உழைக்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

இங்கிலாந்தின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆஷஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
ஜோப்ரா ஆர்ச்சர்
ஜோப்ரா ஆர்ச்சர்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட பல போட்டிகளில் இங்கிலாந்தின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை. 

ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தும் ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். 2022இல் ரூ.8 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஒழுங்காக விளையாடவில்லை. காயம் காரணமாக மோசமான பங்களிப்பினையே அளித்தார். 

29 வயதான ஆர்ச்சர் 2024இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது வேலைப் பளுவைக் குறைக்க 2024 ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோப்ரா ஆர்ச்சர்
ரியல் மாட்ரிட்: அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து அணியாக புதிய சாதனை!

டி20 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். சர்வதேச டி20களில் 25 போட்டிகளில் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

29 வயதாகும் ஜோப்ரா ஆர்ச்சர் பிப், 2021 முதல் காயம் காரணமாக 3 விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் பிபிசி ஸ்போர்ட்டுக்கு அளித்த பேட்டியில் ஆர்ச்சர் கூறியதாவது:

இந்தாண்டு முழுவதும் உபயோகித்து வரும் ஆஷஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும். இன்ஸ்டாகிராம் சென்று அதில் ‘ஆர்ச்சர் அடுத்த 2 வாரங்களுக்கு காயம் காரணமாக ஓய்வெடுக்கப் போகிறார்’ என்பது போன்ற பதிவுகளைப் பார்க்க சலிப்பாக இருக்கின்றன.

ஜோப்ரா ஆர்ச்சர்
ஒரே நாளில் 500-600 ரன்கள் அடிப்போம்..! இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

இந்தாண்டு முழுவதையும் சரியாக பயன்படுத்தி சில நபர்களின் கணிப்பினை தவறென நிரூபிக்க வேண்டியுள்ளது. அடுத்த ஆஷஸ் தொடரில் விளையாடுவேன் என நம்புகிறேன்.

அடுத்தாண்டு வரும் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பேன். சில போட்டிகளில் மட்டும் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வேலைப் பளுவை குறைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இங்கிலாந்தில் நடைபெறும் தி அன்ட்ரட் மென்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சௌத்ர்ன் பிரேவ் அணிக்காக ஆர்ச்சர் விளையாடவிருக்கிறார். 100 பந்துகள் வீசப்படும் இந்தப் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும். இதற்குப் பிறகு இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் களமிறங்க வாய்ப்புள்ளதாக ராப் கீ கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் 2025-2026ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் நடைபெறவிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். தற்போது ஆஷஸ் கோப்பையை ஆஸி. அணி தக்கவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com